இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 12 சிறுவர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஹர்னி ஏரியிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பாடசாலை சுற்றுலாச் சென்ற மாணவர்களின் குழுவே விபத்துக்குள்ளானதாக குஜராத் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது படகில் 27 மாணவர்கள் இருந்ததுடன்இ ஏனைய 13 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.