எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷ் பொதுத் தேர்தலுக்கான சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளராக இலங்கையில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா சென்றுள்ளார்
அதன்படி அவர் இன்று வெள்ளிக்கிழமை காலை பங்களாதேஷின் டாக்கா நகரினை சென்றடைந்தார்
டாக்கா விமான நிலையத்தில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மேடம் தரனா ஹலீம், பங்களாதேஷிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மேதகு தர்மபால வீரக்கொடி, பங்களாதேஷ் தேர்தல் கண்காணிப்பு மன்றத்தின் தலைவர் பேராசிரியர் முஹம்மது அபேத் அலி உட்பட முக்கியஸ்தர்களால் வரவேற்பளிக்கப்பட்டது..