பங்களாதேஷ் நாட்டின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏழாம் திகதி நடைபெற உள்ளது.
ஆனால் பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறும் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று பங்களாதேஷ் தேசியவாத கட்சி தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் உலகின் மிக ஏழ்மையான நாடாகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பங்களாதேஷ், இப்போது பிரதமர் ஷேக் ஹசீனாவின் கீழ் ஆசிய பிராந்தியத்தில் வேகமான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
பங்களாதேஷின் தனிநபர் வருமானம் கடந்த தசாப்தத்தில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது, கடந்த இருபது ஆண்டுகளில் 25 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று உலக வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.