-யாழ் நிருபர்-
யாழில் கால் தவறி கிணற்றினுள் விழுந்த நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை ராஜ்வதனன் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நோர்வேயில் வசித்து வந்த இவர் இலங்கைக்கு வந்த நிலையில், காலை சாப்பிட்டுவிட்டு கை கழுவுவதற்காக கிணற்றடிக்கு சென்றவேளை, கால் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளார், பின்னர் கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.