-கிளிநொச்சி நிருபர்-
பளை பிரதச பொது வைத்தியசாலையில் கடமை நேரம் தவறி வரும் வைத்தியரால் நோயாளிகள் பாரிய சிக்கலை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேச வைத்தியசாலையில் தொடர்ச்சியாக பல பிரச்சனைகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதன் வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை பல் வைத்தியரிடம் வந்த நோயாளிகள் அதிகாலையில் இருந்து நீண்ட நேரமாக காத்திருந்துள்ளனர்.
இதில் கர்ப்பிணி பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல் வைத்தியரின் கடமை நேரம் 8.30ஆக இருந்த போதிலும் அவர் 11.00மணியளவிலேயே வைத்தியர் கடமைக்கு வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வைத்தியர் கடந்த காலங்களில் பல் பிடுங்கைவதற்காக வந்த பெண் ஒருவருக்கு உலோகத்துண்டை வாயினுள் விட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
பளை வைத்தியசாலையில் கடந்த சில தினங்கள் முன் மருந்து மாற்றி வழங்கி குடும்ப பெண் ஒருவர் நோய்வாய்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இது போன்று பல அநீதிகள் பளை வைத்தியசாலையில் இடம்பெற்றும் இதுவரையில் வடமாகாண சுகாதார அமைச்சு கண்டு கொள்ளாத்து பிரதேச மக்களுக்கு மிகவும் வருத்தமளிப்பதாகவும் தமக்கான இன்னல்களை விரைந்து நிவர்த்தி செய்து தரும்படி கேட்டு நிற்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்