நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் : 2 அதிகாரிகள் பணி இடை நிறுத்தம்

நெல் களஞ்சியசாலைகளில் இருந்து பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் உள்ள அரசின் இரண்டு நெல் களஞ்சியசாலையிலிருந்து ஒரு தொகை நெல் காணாமல் போயுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

காணாமல் போயுள்ள நெல் தொகையின் பெறுமதி 650 முதல் 700 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்