-யாழ் நிருபர்-
எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
எல்லை தாண்டி 3 படகுகளில் வந்த 13 இந்திய மீனவர்கள் கடந்த புதன்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று நீரியல்வளத் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தியவேளை, எதிர்வரும் 21ஆம் திகதிவரை 13 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
