-யாழ் நிருபர்-
நெடுந்தீவில் இறந்த இளைஞர் ஐஸ் போதைப் பொருள் பாவனையினால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக மரணித்ததாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அப் பகுதியைச் சேர்ந்த குணாராசா தனுஷன் (வயது – 25 ) என்பவரது சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை இரவு மீட்கப்பட்டிருந்தது.
பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதிலேயே அவர் போதைப்பொருள் பாவனையினால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
