-பதுளை நிருபர்-
லிந்துலை பெரிய ராணிவத்தையில், 24 வீடுகளைக் கொண்ட நெடுங்குடியிருப்பில் நேற்று செவ்வாய் கிழமை இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீப்பரவலில் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
மின்சார ஒழுக்கின் காரணமாகவே தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்தில் அனைத்து வீடுகளுக்கும் தீ பரவிய நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, 31 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் எவருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பிரதேசத்தில் உள்ள நூலகம் தேவாலயம் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.