நுவரெலியா மாவட்டத்தில் போதை பொருட்கள் பாவனை மற்றும் மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருட்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை ஒழிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை நுவரெலியா பொலிஸ் தலைமையகம் ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக இராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.செல்வகுமார் தலைமையில் நேற்று சனிக்கிழமை மாலை இராகலை ஜெமினி மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அனுருத்த பண்டார ஹக்மன தலைமையில் விளிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
