
நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு : போக்குவரத்து நெரிசல்
-நுவரெலியா நிருபர்-
வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.
குறிப்பாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

