நுளம்புக்கு புகைப்போட்ட முதியவர் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
கே.கே.எஸ் பிரதான வீதி, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை செல்வநாயகம் (வயது – 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 19ஆம் திகதி குறித்த முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி நுளம்புக்கு புகைவைத்துள்ளார். இதன்போது அவரது உடையில் தீப்பற்றிய நிலையில் அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.எனினும் சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.