நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின் பிறப்பாக்கி, பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுத்தம் தொடர்பாக தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனத்துக்கு (NSO) அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த மின் பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் நாட்டின் மின்சார விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காகவே குறித்த மின் பிறப்பாக்கி தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










