இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று திங்கட்கிழமை, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு அதிகரித்துள்ளது. எனினும், சில வங்கிகளில் டொலரின் விற்பனை விகிதம் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
செலான் வங்கி: அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328 ரூபாவாகவும், விற்பனை விலை 337.25 ரூபாவாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
என்.டி.பி. வங்கி (NDB) : கொள்வனவு விலை 327.80 ரூபாவிலிருந்து 327.70 ரூபாவாகவும், விற்பனை விலை 336.80 ரூபாவிலிருந்து 336.70 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
மக்கள் வங்கி: கொள்வனவு விலை 328.11 ரூபாவிலிருந்து 328.06 ரூபாவாகவும், விற்பனை விலை 336.24 ரூபாவிலிருந்து 336.19 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கி: அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.33 ரூபாவாகவும், விற்பனை விலை 336.25 ரூபாவாகவும் மாற்றமின்றித் தொடர்கிறது.
சம்பத் வங்கி: கொள்வனவு விலை 328.50 ரூபாவிலிருந்து 328.25 ரூபாவாகவும், விற்பனை விலை 336.50 ரூபாவிலிருந்து 336.25 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
வங்கிகளின் இன்றைய மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன. வங்கி மற்றும் பரிவர்த்தனை வகையைப் பொறுத்து மாற்று விகிதங்கள் மாறுபடுகின்றன.










