கொழும்பு – வெல்லம்பிட்டி, சேதவத்தை பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாரி அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட புகாரினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 30,000 கோதுமை மா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
கால்நடை தீவனம் என்ற போர்வையில் விற்பனைக்கு கோதுமை மா பொதிகள் தயாராக வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது என கருதப்படும் 25 கிலோகிராம் எடையுடைய 8000 சம்பா அரிசி பொதிகளும் இதன் போது மீட்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்