பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து 24 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலியானவர் பம்பஹின்ன பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ள நிலையில் , நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தியத்தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவனின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.