ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், நீர்விநியோகக் கட்டணம் 3 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில் நீர்க்கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் கட்டணத்திற்கு ஏற்கனவே 15 சதவீத வற் வரி அறவிடப்படுகின்றது.
இந்தநிலையில் புதிய வற் வரி திருத்தங்களுக்கு அமைய நாளை மறுதினம் முதல் நீர்க் கட்டணம் மேலும் 3 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.