தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நாட்டின் சில பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த நீர்க் கட்டணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி அக்டோபர் 1 முதல் கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை பிரதேசங்களுக்கே மாதாந்த கட்டணங்களை குறுஞ்செய்தி ஊடாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.