நான்கு மாதங்களாக எந்தவொரு வைத்தியசாலைகளிலும் இன்சுலின் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது இன்சுலின் பற்றாக்குறை நிலவுகிறது. இன்சுலின் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோயளர் ஒருவருக்கு வழங்கக்கூடிய சிகிச்சை என்ன என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.அவர்களின் நிலைமை என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இலங்கையின் சுகாதார துறையில் 4 மாதங்களாக இன்சுலின் மருந்து இல்லை என்பது கவலையாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.