கல்பொட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் இன்று புதன் கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கடுகன்னாவ, பானபொக்கவைச் சேர்ந்த பசிந்து சாமோத் (வயது – 15) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நண்பர்கள் குழுவுடன் புகையிரதத்தில் கல்பொடைக்கு வந்து கல்பொட நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்றபோதே இவர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.