கல்கமுவ, ரம்பொட்டுக்குளம் ஏரியில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று புதன் கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரம்பொட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிாிழந்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.