அவிசாவளை, நாச்சிமலை நீரோடைப் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பலகம – பொல்கஸ்ஹோவிட்ட, கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 12ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஹெஷான் மினோல்ஷா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் பாடசாலை வலைப்பந்தாட்ட அணியில் சிறந்த வீரர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனது நண்பர்களுடன் நீராடுவதற்காக நேற்றையதினம் ஞாயிற்று கிழமை வீட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
