நொச்சியாகம, கலா ஓயாவில் நேற்று செவ்வாய் கிழமை மாலை நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் சில நண்பர்களுடன் கலா ஓயாவிற்கு அருகில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக பெற்றோருக்கு தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி கலாஓயில் நீராடச் சென்ற வேளையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.