நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அதன்படி, இன்று செவ்வாய்கிழமை பெய்த கடும் மழை காரணமாக ஏறாவூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் இந்த வழியே பயணம் செய்யும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதாகவும் இந்த நிலை தொடர்ந்தால் வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


