கண்டி – கலஹா சுதுவெல்ல பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் இன்று வியாழக்கிழமை காலை தெல்தொட்டை பிரிவின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சிறுவன் நேற்று பாடசாலை சென்று வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் அந்தப்பகுதியில் உள்ள பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட நிலையில்இ நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனமை குறிப்பிட தக்கது.