மாரவில – மூதுகடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் இன்று வியாழக்கிழமை கரையொதுங்கியிருந்த நிலையில் மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளது.
மாரவில, மூதுகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த நிசங்சல புஸ்பகுமார (வயது – 16) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.
மூதுகடுவ கடலுக்கு நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர் நேற்று புதன் கிழமை மாலை கடலலையில் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தாா்.இந்நிலையிலேயே அவரின் சடலம் இன்று காலை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.