கொழும்பு ஹோமாகம நீதவான் நீதிமன்றில் பொருத்தப்பட்டுள்ள மின்னல் கடத்தியின் 45 அடி நீள செப்பு கம்பியை அடையாளம் தெரியாத ஒருவர் திருடி சென்றுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டு எப்போது நடந்தது என்பது இன்னும் சரியாக தெரியவில்லை என்பதுடன் இது தொடர்பில் நீதிமன்ற பதிவாளர் ஹோமாகம தலைமையக பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கையிருப்பு கம்பியின் மதிப்பு ரூபா 1 1/2 இலட்சம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டு தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.