காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து குழந்தை உயிரிழந்துள்ளது.
பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தை தங்கியிருந்த விடுதி அறையில் இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், மேற்கொண்ட தேடுதலை அடுத்து நீச்சல் தடாகத்திலிருந்து குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.