நில்வலா கங்கை பெருக்கெடுத்ததால் மொரவக்க – போருபிட்டிய பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
அதன்படி போருபிட்டிய பிரதேசத்தில் 8 வீடுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ள நிலையில், தெனியாய – அக்குரஸ்ஸ பிரதான வீதியின் ஒரு சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மொரவக்க – பரகடுவ பிரதான வீதியின் நில்வலா கங்கைக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பரகடுவ பாலத்தின் அடைப்பினை சுத்தம் செய்யும் பணியில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.
இதேவேளை, மொரவக்க சந்தைக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளன.