முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான வெடிபொருட்கள் நேற்று திங்கட்கிழமை நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி உள்ளிட்ட பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இவை யுத்த காலத்தின் போது நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொண்டு வருகின்றனர்.