-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறியின் சாரதியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ். திலீபன் (வயது – 38) என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த லொறி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.