கொழும்பு பகுதியில் பெண் ஒருவர் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது கணவருடன் இணைந்து தனது நிர்வாண படங்களை விற்பனை செய்ததன் காரணமாக குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.