களுத்துறை கடற்கரையில் இனந்தெரியாத நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை மாலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் சுமார் 35 வயதுடையவர் எனவும் சடலம் நாகொட வைத்தியசாலைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.