84 லட்சம் ரூபாய் பெறுமதியான நிதி மோசடி தொடர்பில் நைஜீரிய பிரஜையொருவர் உள்ளிட்ட இரண்டு பேர் கொழும்பு குற்றத் தடுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வியாபாரம் ஒன்றில் பணத்தை முதலீடு செய்வதாகக் தெரிவித்து, இந்த மோசடி சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.