குறுகிய காலத்தில் ஸ்தாபிக்கப்படும் சில நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பணம் பெற்றுக்கொண்டு இலங்கையில் நான்கு பேரில் ஒருவர் ஒடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு மக்களுக்கு பணத்தை வழங்கி விட்டு வட்டியை பெற்றுக்கொள்ள அவர்களை அதிக உழைச்சலுக்கு உள்ளாக்குவதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், புதிய அதிகாரசபையொன்றை அமைத்து இவ்வாறான நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.