குருநாகல் பகுதியில் நிதிப் பிரச்சினை காரணமாக தந்தையால் அவரது மகன் ஆயுதமொன்றினால், தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகலை மாஎலிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நிதிப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறியதையடுத்து இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை தொடர்பில், 45 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.