-நுவரெலியா நிருபர்-
நாளை வியாழக்கிழமை மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொட்டகலை நகரம் முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெறும் என கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் புஷ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் பொருளாதார நிலைமையை கண்டித்து நாளை கடையடைப்பு நடைபெறும் என வணிகர் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற வர்த்தகசங்க அவசர கலந்துரையாடலில் இம் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த கடையடைப்பில், கொட்டகலை நகர் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைத்து வணிகர்களும் பங்கேற்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.










