தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை, நாளை ஞாயிற்றுக்கிழமை குறைவடையும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.