நாரஹேன்பிட்டிய – 397 வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ பரவல் ஏற்பட்ட வீட்டில் இருந்த ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், பொலிஸாரால் கொழும்பு தேசிய வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த சுமார் 50 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.
தீ பரலுக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.