நாரம்மல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடுடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும்வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரும், கட்டளையை மீறி பயணித்த லொறியை பின் தொடர்ந்துச் சென்ற நிலையில், லொறி நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் உப பொலிஸ் பரிசோதகரிடமிருந்த துப்பாக்கி செயற்பட்டதால் லொறியின் சாரதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளாா்.