யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது .
படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பத்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சனிக்கிழமை உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் (வயது 35) இரண்டு வயது பிள்ளையின் தந்தை ஆவார்.