தென்கொரியாவில் 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பதை நிறுத்தும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
கடந்த சில தசாப்தங்களாக நாய் இறைச்சி உணவருந்துபவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதுடன் இளைஞர்கள் நாய் இறைச்சி உண்பதை தவிர்க்கிறார்கள்.
சட்டத்தின் கீழ், நாய்களை வளர்ப்பது அல்லது வெட்டுவது, நாய் இறைச்சியை விநியோகிப்பது அல்லது விற்பனை செய்வது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படும். அவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்படலாம்.
அந்த சட்டத்தின்படி கசாப்பு நாய் கடைகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், அதே நேரத்தில் இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பவர்கள் அல்லது நாய் இறைச்சி விற்பனை செய்பவர்கள் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கலாம்.
இந்த புதிய சட்டம் மூன்று ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும், எனவும் இந்த கால அவகாசம் விவசாயிகளுக்கும் உணவக உரிமையாளர்களுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்திற்கான மாற்று ஆதாரங்களைக் கண்டறிய அவகாசம் அளிக்கிறது. அவர்கள் தங்கள் வணிகங்களை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டத்தை தங்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நாய் இறைச்சி பண்ணையாளர்கள், இறைச்சிக் கடைக்காரர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு முழு ஆதரவளிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது, அவர்களின் வணிகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும், இருப்பினும் என்ன இழப்பீடு வழங்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தென் கொரியாவில் 2023 இல் 1,600 நாய் இறைச்சி உணவகங்கள் மற்றும் 1,150 நாய் பண்ணைகள் காணப்பட்டுள்ளதாக தரவுகள் கிடைத்துள்ளன.