ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவை தாக்கி அவரிடமிருந்து 60,000 ரூபாய் மற்றும் கைத்தொலைபேசியை அபகரித்த குற்றச்சாட்டின் பேரில் நாமல் குமாரவின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.
முப்பத்தைந்து வயதுடைய வர்த்தகரான தந்தை மற்றும் அவரது இருபத்து மூன்று வயது கூலித் தொழிலாளியான மகன் என்போரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தடிகளால் தாக்கப்பட்டு, கால்களால் உதைக்கப்பட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நாமல் குமார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் தொடர்பில் வரக்காபொல பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.