கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடமொன்றில் மூன்றாவது மாடியில் இன்று வெள்ளிக்கிழமை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயை அணைப்பதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
மேலும் தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.