இந்தியாவின் – விசாகப்பட்டினத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெறும் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது
இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
உலக கிண்ண இருபதுக்கு 20 தொடர் ஆரம்பிப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில், அதனை இலக்கு வைத்து இந்த தொடரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.