வறுமை காரணமாக சிறைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வோதய மேம்பாட்டு நிதி நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 27 ஆவது தேசிய கைதிகள் தின நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனை குறைப்பதே தங்களுடைய நோக்கம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சமூக நீதி மூலம் பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதன் மூலம் சிறைக்குச் செல்லும் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்