நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 03 கொவிட் இறப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை பதிவான கொவிட் இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 16,559 ஆக அதிகரித்துள்ளது.
இதே வேளை, இன்று திங்கட்கிழமை கொவிட் தொற்று உறுதியான மேலும் 108 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 665,847ஆக அதிகரித்துள்ளது