வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் புதன் கிழமை உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் என்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.