மொனராகலை புத்தல பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 11.20 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட் அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மற்றும் படால்கும்பர ஆகிய பகுதிகளிலும் இந்த நில அதிர்வின் தாக்கம் உணரப்பட்டுள்ளதுடன் குறித்த நில அதிர்வினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.