வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கரட் ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 750 ரூபாவாகவும், பீட்ரூட் கிலோ 380 ரூபாவாகவும், முட்டைக்கோஸ் கிலோ 500 ரூபாவாகவும், பீன்ஸ் கிலோ ஒன்றின் மொத்த விலை 600 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. .
அத்துடன், வெண்டைக்காய், தக்காளி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்இ அவர் தெரிவித்தார்.
விலையேற்றம் காரணமாக நுகர்வோர் காய்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.